சாய்ந்தமருது அல்-ஜலாலின் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்
ரமழான் விடுமறையை தொடர்ந்து பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய நோன்புப் பெருநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் டீ.கே.எம்.சிராஜ் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை பணியாட்குழுவினரின் முழுமையான பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நோன்புப் பெருநாளைச் சிறப்பிக்கும் முகமாக வீடுகளில் தயாரிக்கப்பட்ட இனிப்புப் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பெருநாள் நிகழ்வுகள்
இதன்போது அதிதிகள் மற்றும் பணிக்குழுவினருக்கான விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீமின் ஆலோசனையின் பேரில் கல்விப் பணிமனையின் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.வரணியா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.என்.ஏ.மலீக், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலீக், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம்.முதர்ரிஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






