நாவிதன்வெளியில் வேட்பாளர் நளீர் கொடுத்துள்ள உறுதிமொழி
நாவிதன்வெளி பிரதேச சபையில் புதிய வருமான வழிகளை நாங்கள் உருவாக்கி மக்கள் நல திட்டங்களை முன்னெடுப்போம் என வேட்பாளர் எம்.ஏ.நளீர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
நேற்று(05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களத்தால் ஒதுக்கப்படும் நிதிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல வருமான மூலங்கள் எங்கள் வசம் உள்ளது.
பொய் பிரச்சாரம்
நாங்கள் கடந்த காலங்களில் எப்போதும் இனவாதமாகவோ, பிரதேச வாதமாகவோ இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை.
நாவிதன்வெளி பிரதேச சபையை வைத்துக்கொண்டு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதமாக செயற்பட்டவர்களையும், முஸ்லிம் சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்களையும் மக்கள் இம்முறை நிராகரிக்க தவறமாட்டார்கள்.
மாற்றுக் கட்சிக்காரர்கள் போலியான பிரச்சாரம் செய்கிறார்கள். அவை பொய் பிரச்சாரம் என்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |