முட்டை மழையில் நிறைந்த கனடாவில் இடம்பெற்ற இரத யாத்திரை: வெடித்த சர்ச்சை
கனடா - டொரான்டோவில் இடம்பெற்ற இந்திய இரத யாத்திரை ஒன்றின் போது மர்ம நபர்களால் முட்டைகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த யாத்திரையின் போது வீதியின் ஓரத்திலிருந்த கட்டடங்களிலிருந்து மர்ம நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரத யாத்திரையை நிறுத்துவதற்காகவே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அங்கிருந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.
யாத்திரை நிறைவு
அத்தோடு, மர்ம நபர்களின் நோக்கம் நிறைவேறவில்லை எனவும் யாத்திரை நிறைவு பெற்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, இனவெறி சீற்றத்திற்கும் குற்றச்சாட்டுகளுக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |