கிழக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

Trincomalee Sri Lanka Eastern Province
By Laksi Oct 25, 2024 03:46 PM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று (25) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, ஒவ்வொரு உள்ளுராட்சி சபையும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதுடன், எடுக்கப்பட வேண்டிய தீர்வுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்: பிரதமர் ஹரிணி எடுத்துரைப்பு

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு திட்டம்: பிரதமர் ஹரிணி எடுத்துரைப்பு

ஆளுநர் உத்தரவு

அத்தோடு, உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், கழிவுகளை பிரித்து சேகரித்து கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு ஆளுநருக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் | Eastern Governor Meet Local Council Secretaries

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்து அறிக்கை அளிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் செயளாலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

கிழக்கு ஆளுநரை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று திடீர் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் இன்று திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW