குறிஞ்சாங்கேணி படகுப்பாதையில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை

Trincomalee Sri Lanka Sri Lankan Peoples Eastern Province School Incident
By Rakshana MA Nov 23, 2024 06:38 AM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் 3ஆம் வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த துஆ பிரார்த்தனையானது இன்று (23) கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் .எம். கனி தலைமையின் கீழ் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் நடைபெற்றுள்ளது.

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி

3ஆம் வருட நினைவு கூறல்

இதன் போது கிண்ணியா நகர சபை செயலாளர்,உலமா சபை சூறா சபை , கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள், மதரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

குறிஞ்சாங்கேணி படகுப்பாதையில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை | Dua Prayer For Victims In Kurinchankeni Kinniya

குறித்த படகு பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய் உட்பட சுமார் 08 பேர் உயிரிழந்திருந்தனர்.

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம்

மட்டக்களப்பில் மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம்

பாலத்தின் பயன்பாடும் புனரமைப்பும்

தொடர்ந்தும் தற்போது இப்பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர். பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

குறிஞ்சாங்கேணி படகுப்பாதையில் மரணித்தவர்களுக்கான துஆ பிரார்த்தனை | Dua Prayer For Victims In Kurinchankeni Kinniya

எனவே இது தொடர்பாக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

மேலும் ஆளும் கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திர குறித்த பாலத்தில் பால புனரமைப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றையும் கடந்த காலத்தில் முன்வைத்திருந்தார்.

எனினும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.    

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தேசிய ரீதியாக சாதித்த கல்முனை வலயக் கல்வி பணிப்பாளருக்கு கௌரவிப்பு

தேசிய ரீதியாக சாதித்த கல்முனை வலயக் கல்வி பணிப்பாளருக்கு கௌரவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGallery