நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி

Ampara Eastern Province Kalmunai
By Laksi Nov 22, 2024 06:09 AM GMT
Laksi

Laksi

13 வயதுக்குட்பட்ட 03ஆம் பிரிவுக்கான கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியானது காரைதீவு கனகரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கல்முனை ஸாஹிரா கல்லூரி அணிக்கும் நிந்தவூர் அல்- அஷ்ரக் அணிக்கிடையிலான கடின பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அல்-அஷ்ரக் அணி 16 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நலீம் தெரிவு

ஸாஹிரா அணி வெற்றி

இதை எதிர்கொண்ட ஸாஹிரா கல்லூரி அணியினர் 11 வது ஓவரில் 3 விக்கெட்டினை இழந்து 37 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி | Kalmunai Zahira College Win For Hard Ball Cricket

தொடர்ந்தும் முதல் இன்னிங்சை விளையாடிய கல்முனை ஸாஹிரா அணி 22 வது ஓவர் நிறைவில் 75 ஓட்டங்களுடன் 9 விக்கெட்டுடன் டிக்லயார் செய்து எதிர் அணிக்கு சந்தர்ப்பம் வழங்கியது.

மேலும்,  அல் அஸ்ரக் அணி இரண்டாவது இன்னிங்சில் 111 ஓட்டங்களுக்குக் 7 விக்கெட்டினை விட்டுக்கொடுத்து போட்டியை டிக்லயார் செய்தது.

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அதிபர் வாழ்த்து

இதனையடுத்து,  ஸாஹிரா கல்லூரி அணி துடுப்பெடுத்தாடிய போது விக்கெட் இழப்பின்றி 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை போட்டி நிறைவடைந்தது.போட்டியில் கல்முனை ஸாஹிரா அணி வெற்றியீட்டியது.

நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையை வெற்றி கொண்ட கல்முனை ஸாஹிரா கல்லூரி | Kalmunai Zahira College Win For Hard Ball Cricket

இந்த போட்டியில் ஸாஹிரா அணி வீரர் முஹம்மட் மிஸ்தாக் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றிக்காக உறுதுணையாய் இருந்த பாடசாலையின் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர், மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கிய பொறுப்பாசிரியர்கள், மற்றும் திறமையாக விளையாடிய மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு

நுவரெலியாவில் பழமையான மரங்களை பாதுகாப்போம் : தொடரப்படும் வழக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW