மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி நெறி
மாணவர்களுக்கான தலைமைத்துவ மற்றும் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியானது பொலிஸ் கெடட் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சிந்தக குணரத்னவின் தலைமையில் நேற்று (29) மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கலந்து கொண்டு மாணவர்களுக்கு தலைமைத்துவம் சம்மந்தமான பெறுமதியான விடயங்களை முன்வைத்தார்.
பயிற்சி நெறி
இந்த பயிற்சி நெறியானது பொலிஸ் கெடட் பிரிவின் கட்டளைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் பொலிஸ் கெடட் தலைமையகம் மற்றும் பொரலந்த பொலிஸ் கெடட் பயிற்சி நிலையத்தின் பொலிஸ் கெடட் ஆலோசகர்களால் நடாத்தப்பட்டது.
ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய மாணவர்கள் 35 பேர் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பெற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |