வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்

Batticaloa Anura Dissanayake Ranil Wickremesinghe Eastern Province
By Laksi Aug 30, 2024 07:09 AM GMT
Laksi

Laksi

வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள மாஞ்சோலை, பதுரியா கிராமத்தில் ஆங்கில மொழிக் கற்கை மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த மகளிருக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது வாழைச்சேனை ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஜவாத் டைலர் தலைமையில் நேற்று (29) மாலை பதுரியா கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் சுற்றாடல் அமைச்சர் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தலைவருமான வட மேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

காணிப்பிரச்சினை

இதனையடுத்து உரை நிகழ்த்திய நஸீர் அஹமட் , வட மேல் மாகாண ஆளுனர் பதவி என்பது புதிய மற்றும் விசித்திரமான அனுபவங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளது.மட்டக்களப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபதினாயிரம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இங்கு காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலும் மிகக்குறுகிய நிலப்பரப்பிலுமே இந்த முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

குருநாகல் மாவட்டத்திலும் அதேயளவான ஒரு இலட்சத்தி இருபதினாயிரம் அளவிலான முஸ்லிம்கள் வாழ்ந்த போதும், அங்கு 108 முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை அங்குள்ள மக்கள் எதிர்நோக்கவில்லை. அதே போன்று கடந்த காலங்களில் பல்வேறு வித்தியாசமான சூழ்நிலைகள் ஏற்பட்ட போதும், முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் நல்லுறவாகவே வாழ்ந்து வருகின்றனர்.

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் | Certificate For Completion Of Vocational Courses

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தற்போதைக்கு அந்த சூழ்நிலை இன்னும் வலுப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் முழு நாட்டிலும் இப்போது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. இனவாதத்தை ஒழித்த ஒரே அரசியல் தலைவர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறுபான்மை சமூகங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தவறுதலாக பழைய தூபியொன்றின் மீது செருப்புக் கால்களுடன் ஏறியதற்காக இனவாதம் பேசிய சஜித் பிரேமதாச ஆகட்டும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தீவிரவாதம் முஸ்லிம் பெண்களின் கருவறையில் வளர்வதாகவும், இஸ்லாமிய மதம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதன் காரணமாக அது இஸ்லாமிய தீவிரவாதம் என்றழைக்கப்படுவதாகவும் அனுரகுமார திசாநாயக்கவும் இனவாத வன்மங்களை கக்கியிருந்தனர். அவர்களை நம்பி ஏமாற முஸ்லிம்கள் தயாரில்லை.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

முஸ்லிம்களின் உரிமைகள்

அதே போன்று இன்றைக்கு முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எவ்வாறான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்? எவ்வாறான உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்? உண்மையைச் சொல்வதாக இருந்தால் அவர்கள் அதிகாரத்தில் இருந்த காலங்களில் தான் முஸ்லிம்களின் உரிமைகள் பறிபோயுள்ளன.

அதனை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு தங்களைத் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்அரசியல்வாதிகள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை ஆனால் எனது வாழ்நாளுக்குள் குறைந்த பட்சம் இந்த மாவட்ட மக்களிடம் இருந்து பறிபோன உரிமைகளையேனும் மீட்டுக் கொடுக்க நான் முழுமூச்சுடன் செயற்படுவேன். இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் எதுவித சமரசமும் இன்றி எதிர்த்து நிற்பேன்.

வாழைச்சேனையில் தொழிற்பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் | Certificate For Completion Of Vocational Courses

கடந்த காலங்களில் நான் மேற்கொண்ட அவ்வாறான செயற்பாடுகள் காரணமாக அச்சம் கொண்ட ஏனைய இன அரசியல்வாதிகளின் துணையுடன் எனது நாடாளுமன்றப் பதவி சூழ்ச்சிகரமான முறையில் பறிக்கப்பட்டது. ஆனால் அதனை விட உயர்ந்த ஆளுனர் பதவி தற்போதைக்கு எனக்கு கிடைத்துள்ளது. எனவே எந்தவொரு சூழ்ச்சிக்கும் நான் அஞ்சவோ, பின்வாங்கவோ மாட்டேன். எனது மக்களின் உரிமைகளுக்காக என்றும் முன் நின்று போராடுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் தஸ்லீம், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சல்மான் வஹாப் ஆசிரியர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான றஹீம் ஆசிரியர், காசிம் மௌலானா, சமூக சேவகர் நிஜாம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச ஊடகச் செயலாளர் எஸ்.ஐ.நிப்ராஸ், கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சாஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery