அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

A D Susil Premajayantha Education
By Mayuri Aug 30, 2024 05:38 AM GMT
Mayuri

Mayuri

அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் களையப்பட்டு 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 55,000 ரூபாவாக உயர்த்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் சம்பளம்

அரசாங்கம் தயாரித்துள்ள வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர் | Teachers Salaries Will Be Increased From January

அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பு நியாயமானது என அரசாங்கம் கூறுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW