அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

Ampara United Kingdom Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Oct 23, 2024 10:58 AM GMT
Laksi

Laksi

அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதனை தவிர்க்குமாறு  ஐக்கிய இராச்சியம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் வழங்கிய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய இராச்சியம்  இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

இந்த நிலையில், குறித்த பகுதிக்குச் செல்வோர் தகவல்தொடர்பு சாதனங்களை இலகுவில் பயன்படுத்தக் கூடிய வகையில் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு | Don T Go To Arugambay Beach Uk Alert

அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக  சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

காரைதீவில் நான்கு கல்வி வலயங்களுக்கான மாணவத் தூதுவர் மாநாடு

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW