அக்கரைப்பற்று வைத்தியசாலை அபிவிருத்தி! அபிவிருத்திக்குழுவுடன் கலந்துரையாடிய பிராந்திய பணிப்பாளர்
அக்கறைப்பற்று(Akkaraipattu) பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துரையாடலையும் முன்னெடுத்துள்ளார்.
குறித்த குழுக்கூட்டமானது, நேற்று(20) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸதீனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அபிவிருத்திக் கூட்டத்தில், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வைத்தியசாலை அபிவிருத்தி
மேலும், வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட பணிப்பாளர் வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் இதன்போது உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.நசீர் உள்ளிட்ட வைத்தியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |