நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு

Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Eastern Province Nintavur
By Rakshana MA May 26, 2025 10:19 AM GMT
Rakshana MA

Rakshana MA

நிந்தவூர் (Nintavur) பிரதேசத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, இன்று (26) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சஹிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஜீவா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

டெங்கு தடுப்பு நடவடிக்கை

இதற்கமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கமு/கமு/அல் - மஸ்லம் வித்தியாலயத்துடன் இணைந்து குறித்த நடவடிக்கையினை, ஏற்பாடு செய்து பாடசாலையின் சுற்றுவட்டாரத்தில் இந்த டெங்கு நோய் தடுப்பு செயற்றிட்டம் இடம்பெற்றது.

நிந்தவூரில் சுகாதார பிரிவினரால் விசேட செயற்றிட்டம் முன்னெடுப்பு | Dengue Prevention Activities At Nintavur

இதன்போது, டெங்கு நுளம்புகள் அற்ற பாதுகாப்பான பிரதேசமாக பாடசாலை சுற்றுச்சூழலை மாற்றி அமைக்கும் நோக்குடன் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பாடசாலை சூழலில் உள்ள வீடுகளுக்கு தரிசிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழித்தொழிக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு குடம்பிகள் பெருகும் வகையில் சுற்றாடலை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம்.பைசல், பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதுர்சன் உள்ளிட்ட பாடசாலையின் மேல் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர் .

அக்கறைப்பற்று வாள்வெட்டு சம்பவம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

அக்கறைப்பற்று வாள்வெட்டு சம்பவம் : போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி

காராத்தே போட்டியில் சாதனை படைத்த பல்கலைக்கழக மாணவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery