புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Colombo Puttalam SL Protest Sri Lanka Police Investigation
By Laksi Aug 25, 2024 01:42 PM GMT
Laksi

Laksi

கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு வந்து  அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (25) புத்தளம், மணல்குன்று தொடருந்து பாதைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள குப்பை கூளங்கள் தொடருந்து மூலம் கொண்டு செல்லப்பட்டு குறித்த பகுதியில் கொட்டப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய


ஆர்ப்பாட்டம்

இதேவேளை, இந்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2018 செப்டெம்பர் 28 ஆம் திகதி புத்தளம், கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக புத்தளம் மக்கள் 100 நாள் சத்தியாக்கிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் | Demonstration Against Dumping Garbage In Puttalam

இதனையடுத்து, இரவு வேளைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் டிப்பர் வாகனத்தின் மூலம் குப்பைகள் அருவக்காட்டுக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் குப்பைகளை கொண்டுசெல்லும் இந்த செயற்பாடு நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர், மீண்டும் இன்று கொழும்பிலிருந்து குப்பைகளை தொடருந்து மூலம் ஏற்றிச்சென்று அருவைக்காட்டில் கொட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல நோய்கள் பரவும் அபாயம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

பல நோய்கள் பரவும் அபாயம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW