அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Ranjith Siyambalapitiya
By Mayuri Aug 25, 2024 11:15 AM GMT

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் நாளை (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் நிலுவை வரிகளை வசூலித்து அரச வருமானத்தை அதிகரிக்கச் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள்

வரி நிலுவையை வசூலிப்பதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து வரி விவரங்களும் நாளை வெளியாகும்! ரஞ்சித் சியம்பலாபிட்டிய | Tax In Sri Lanka

இதற்கமைய திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW