கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில்

COVID-19 Parliament of Sri Lanka Rauf Hakeem Nalinda Jayatissa
By Laksi Dec 17, 2024 10:53 AM GMT
Laksi

Laksi

கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்தமை தொடர்பில் அறிக்கை தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்(rauf hakeem) கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் (17) உரையாற்றும் போதே அவர் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்தோடு ,இது தொடர்பில் கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தகவல்களை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து

புதிய சபாநாயகருக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து

மருத்துவ நெறிமுறைகளில் பிரச்சினை

தற்போதைய அரசாங்கமும் இது தொடர்பான தகவல்களை மறைத்து வருவதாகவும், இது நாட்டின் சுகாதார அதிகாரிகளையும் அவமானப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில் | Dead Bodies Of Muslims During Covid 19 Rishad

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa), இது தகவல்களை மறைப்பதில் உள்ள பிரச்சினையல்ல, மருத்துவ நெறிமுறைகளில் உள்ள பிரச்சினையாகும்.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

புதிய அரசாங்கம் 

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 13,183 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளின் விவரங்களை வெளியிட அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா கால ஜனாஸா எரிப்பு விவகாரம்: அமைச்சர் அளித்த பதில் | Dead Bodies Of Muslims During Covid 19 Rishad

அப்போதைய அரசாங்கத்தின் முடிவுகள் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கம் இந்த தகவலை மறைக்க நினைக்கவில்லை எனவும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி பதில் அளிப்பதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW