ரமழான் நாள் 9 : நன்றி செலுத்துங்கள்
இன்றைய தினத்துடன் 9ஆவது நோன்பிலுள்ளோம். எம்மை கடந்து சென்ற நாட்களில் அனைவரின் இயல்பு முதல் குணங்கள் வரையிலும் அதிகளவான மாற்றங்களை உருவாக்கியிருப்போம்.
இந்நிலையில் நன்றி செலுத்துவது என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும், இவ்வாறு நன்றி செலுத்துவது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் சக மனிதனுடனான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையையும் ஊக்குவிக்கின்றது.
அதுமட்டுமன்றி அருள் மிகுந்த இந்த ரமழான் மாதத்தில் நன்றி செலுத்துவது மிகவும் சிறப்பானது.
நன்றி செலுத்துவதன் நன்மைகள்
இந்த மாதத்தில் நன்றி செலுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில,
- ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- மனதிற்கு அமைதியை அளிக்கிறது.
- சமூகத்தில் நன்மதிப்பை அதிகரிக்கிறது.
இந்த ரமழான் மாதத்தில் அதிகமாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |