அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Local government Election Political Development
By Rakshana MA Mar 10, 2025 06:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பாரை மாவட்ட தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, நேற்று(09) ஒலுவில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.

இன்றைய நாளுக்கான தங்கவிலை நிலவரம்

இன்றைய நாளுக்கான தங்கவிலை நிலவரம்

கலந்துரையாடல்

மேலும்,  இதன்போது போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் , சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அம்பாறையில் ஆரம்பமாகியுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான விசேட கலந்துரையாடல் | Local Government Election Campaign In Ampara

மேலும், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ.காதர், கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீ.சமால்தீன், உயர் பீட உறுப்பினர் சப்றாஸ் , அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பிரதேச உச்ச பீட உறுப்பினர்கள், மத்திய குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery