முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

Anura Kumara Dissanayaka Government Employee Government Of Sri Lanka Thurairajah Raviharan
By Rakshana MA Mar 09, 2025 12:45 PM GMT
Rakshana MA

Rakshana MA

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க மகளிர் விவகார அமைச்சின் ஒத்துழைப்பும் அவசியம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (08) இடம்பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்பள்ளிகளில் மிகவும் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக மகளிர்களே கடமையாற்றுகின்றார்கள்.

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

ஏறாவூரில் இனப்பிரச்சினையை தூண்டும் யூடியூபர்! சபையில் கண்டனம் தெரிவித்த உறுப்பினர்

ஒருமாத கொடுப்பனவு

இவ்வாறு கடமையாற்று முன்பள்ளி ஆசிரியர்களுடைய ஒருமாத கொடுப்பனவு வெறும் 6,000 ரூபா மட்டுமேயாகும். என்ன செய்வது, எப்படிச்சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றார்கள்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான அறிவித்தல் | Government Employees Salary Increased At Sri Lanka

இதுதொடர்பில் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். இந்த முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்கு மகளிர் விவகார அமைச்சரும் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்களின் ஒப்பற்ற சேவைக்குரிய கொடுப்பனவு போதுமானதா? சற்று எண்ணிப்பாருங்கள். இந்தவிடயத்தில் அரசு கவனம் செலுத்தவேண்டும்.

அதற்கு மகளிர் விவகார அமைச்சின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்கள் தொடர்பிலான அறிவித்தல்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு தகுதியான வாக்காளர்கள் தொடர்பிலான அறிவித்தல்

சர்வதேச ஊடகவியலாளருக்கு பகிரங்க சவால் விட்ட ஜனநாயக கட்சியின் தலைவர்

சர்வதேச ஊடகவியலாளருக்கு பகிரங்க சவால் விட்ட ஜனநாயக கட்சியின் தலைவர்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW