ரமழான் நாள் 8 : மன அமைதியை அடையுங்கள்
இன்றைய தினத்துடன் 08ஆவது நோன்பை கடந்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் அனைவருக்குள்ளும் பல்வேறு நல்ல பண்புகள் வளர்த்து ஆன்மீக ரீதியிலும் உயர்ந்த நிலையை அடைந்திருப்போம்.
இதில் மன அமைதி தொடர்பிலும் சிறிய தெளிவு பெற வேண்டிய தருணத்தில் உள்ளோம்.
மன அமைதி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இது மனிதர்களை சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உந்துதல் அளிக்கின்றது.
மன அமைதியின் நன்மைகள்
ரமழான் மாதத்தில் மன அமைதியை அடைவது மிகவும் சிறப்பானது. இந்த மாதத்தில் மன அமைதியை அடைவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சி மட்டுமன்றி இன்னும் அதிகமான பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். அவற்றுள் சில,
- மன அமைதி ஆன்மாவை தூய்மையாக்கி ஆன்மிக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- சமூகத்தில் மதிப்பை அதிகரிக்கிறது.
- மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- தெளிவான சிந்தனைக்கு வழி வகுக்கின்றது.
- இம்மை - மறுமை வெற்றிக்கு வழி வகுக்கின்றது.
இந்த மாதத்தில் அல்லாஹ்வின் அருள் மிகுதியாக கிடைக்கும் என்பதால் அவனுக்கு பிடித்த நல்ல குணங்களை அனைவரும் வளர்த்துக்கொள்வதும் அவனுடைய அருளை அதிகளவு பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும்.
அத்துடன் இம்மாதத்தில் அதிகளவான திக்ர் துஆ கேட்பதனட மூலம் மன அமைதியை அடையலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |