மீண்டும் முட்டை மற்றும் கோழி விலையில் மாற்றம்
நாட்டில் அண்மைக்காலமாக அத்தியவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் காணப்படும் நிலையில், தற்போது உள்நாட்டு சந்தையில் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
சந்தை விலை
அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி,
கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகள் உயர்ந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம்(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜெயசேகர இது தொடர்பில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரிக்கும். அத்துடன் கோழித் தீவன பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |