மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்

SLPP Namal Rajapaksa Dhammika Perera Sri Lanka Presidential Election 2024
By Rukshy Jul 27, 2024 03:02 AM GMT
Rukshy

Rukshy

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

வானிலை தொடர்பில் வெளியாகிய முன்னறிவிப்பு

வானிலை தொடர்பில் வெளியாகிய முன்னறிவிப்பு

வர்த்தமானி அறிவிப்பு

2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதியன்று, இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையகம் நேற்று (26.07.2024) அறிவித்தது.

மொட்டுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல் | Dammika As Presidential Candidate Of Slpp

தேர்தலுக்கான வேட்புமனுக்கள், 2024 ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம், 2024 நவம்பர் 17 அன்று முடிவடைகிறது.

அத்துடன், பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழில் தாக்கப்பட்ட வெற்றிலை வியாபாரி

யாழில் தாக்கப்பட்ட வெற்றிலை வியாபாரி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW