பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான தகவல்
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ,பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வெட்டுப்புள்ளி
இந்தநிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பல பல்கலைக்கழகங்கள் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 43,000 க்கும் அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |