முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Police Facebook Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA May 18, 2025 03:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

நுவான் சண்டகெலும் என்ற பெயரில் முகப்புத்தக கணக்கு வழியாக பரப்பப்படும் சிறுவர்களின் படங்களைக் கொண்ட சமூக ஊடகப் பதிவுகளை அடுத்தவருக்கு பகிர்வதைத் தவிர்க்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து பகிரும் செயற்பாடானது, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் அடையாளம், தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

குழந்தைகளின் புகைப்படம்

குறித்த முகப்புத்தக பதிவில், அந்த நபரின் மனைவி அவரையும் அவர்களது பிள்ளைகளையும் விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவர் தனது இரண்டு குழந்தைகளைப் பராமரிக்க சிரமப்படுவதாகவும், தனது சொந்த வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன்னர், பிள்ளைகளை அழைத்துச் செல்ல விரும்பும் எவருக்கும் அவர்களை கையளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Controversial News Spread Via Facebook Account

இந்த விவகாரத்தில் இலங்கை பொலிஸ் ஏற்கனவே தலையிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பத்தின் திருமணப் பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்கு தற்போது நடந்து வருகிறது.

அத்துடன் பிள்ளைகளின் தற்காலிக பாதுகாப்பு, நன்னடத்தை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் அவர்களின் பாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவைப் பொறுத்து, தேவைப்பட்டால் மேலும் தலையீடு செய்யப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளி

வவுனியாவில் இன்று காலை மினி சூறாவளி

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW