நீடிக்கவுள்ள மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Aug 20, 2024 02:01 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீடிக்கவுள்ள மழையுடனான காலநிலை | Continued Rainy Weather Srilanka

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று காற்று வீசக்கூடும்.

மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: அனுர வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: அனுர வெளியிட்டுள்ள தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW