காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

Sri Lanka Department of Meteorology Weather
By Chandramathi Nov 15, 2025 05:29 AM GMT
Chandramathi

Chandramathi

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அநுர!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அநுர!

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சி

அந்த அறிக்கையில் மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Climate Change Sri Lanka 

ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Climate Change Sri Lanka

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிறு கலிமா பெருநன்மை

சிறு கலிமா பெருநன்மை