நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டிய ஜனாதிபதி அநுர!
புத்தளத்தின் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற வைத்தியசாலை மற்றும் அருவக்காலு குப்பை திட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், நேற்றையதினம் (14) நாடாளுமன்ற உரையில், புத்தளத்தின் முக்கிய பிரச்சினையாக காணப்படக்கூடிய மேற்குறித்த பிரசினைகள் தொடர்பாக ஆற்றிய உரையை தொடர்ந்து உடனடி நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார்.
புத்தளத்தின் பிரச்சினைகள் தொடர்பாக ஹிஸ்புல்லாஹ் எம்.பி சுட்டிக்காட்டி உரையாற்றிய போது, ஜனாதிபதி அநுரகுமார நாடாளுமன்றத்திலேயே இருந்துள்ளார்.
வாக்குறுதி
பின்னர், புத்தளம் எம்.பி பைசல், ஹிஸ்புல்லாஹ் எம்.பி பகல் உணவுக்காக நாடாளுமன்ற சிற்றூண்டிச்சாலைக்கு சென்றபோது, அங்கே பகல் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி, பைசல், ஹிஸ்புல்லாஹ் அவர்களை அருகே அழைத்து ஹிஸ்புல்லாஹ்வின் புத்தளம் சம்மந்தமான உரையை பாராட்டியுள்ளார்.
[830Q ]
அத்துடன், தான் புத்தளம் சென்றபோது அங்கே அவர்களுக்கு வைத்தியசாலை தொடர்பாக வாக்குறுதி வழங்கியதாகவும், அதனை அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் பைசல் எம்.பி “ஆம், அது எங்களுக்கும் மிகப்பெரிய பிரச்சினை. அதனை தரமுயர்த்தி தருவதாக நீங்களும் வாக்குறுதி வழங்கினீர்கள், பிரதமர் அவர்களும் வந்தபோது வாக்குறுதி வழங்கினார், எனவே அதனை செய்து தாருங்கள்” என கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அங்கே இருந்த சுகாதார அமைச்சரை ஜனாதிபதி அழைத்து “இன்னும் 6 மாதங்களுக்குள் புத்தளம் தல வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதனை உடனடியாக செய்யுங்கள்.'' என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.