கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம்
அரசாங்கத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பெயரில் இன்று(01) மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் நகரின் மத்தியில் காணப்படும் களியங்காடு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
சிரமதானப்பணி
அண்மையில் ஏற்பட்ட அடை மழை காரணமாக பெரிய நிலப்பரப்பில் அமைந்து காணப்படும் இப்பகுதியானது, பற்றைக் காடுகள் வளர்ந்து டெங்கு நோய் பரவும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் காரணமாகவும் இப்பகுதியை அண்டிய மக்களின் சுகாதார நலனையும் கருத்திற் கொண்டு இந்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், குறித்த சிரமதானப்பணியானது அரச அலுவலகங்கள், ஆலயங்கள், குடியிருப்புகள் போன்ற பகுதிகளில் இடம்பெற்றது.
மேலும், இறுதி கிரிகைகளுக்காக வரும் மக்களின் சுகாதார பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, அதிக அளவிலான மாநகர சுகாதார ஊழியர்கள் பங்குபற்றுதவுலுடன் இந்த பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |