கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம்

Trincomalee Sri Lankan Peoples Clean Sri lanka
By Kiyas Shafe Jan 11, 2025 07:30 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ், 'தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒரு படி' என்ற தொனிப் பொருளில் கிண்ணியா - மட்டக்களப்பு வீதி பிரதான கடற்கரையை சுத்தப்படுத்தி, மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த வேலைத்திட்டமானது, இன்று(11) கிண்ணியா நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, UNFPA மற்றும் தனியார் நிறுவனங்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி தனியார் தொண்டு நிறுவனமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

சுற்றுச்சூழல் சுத்தம் 

மேலும், கடல் மாசுபாடு மற்றும் காடழிப்பு ஆகியவற்றால் ஏற்படும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சமூக உறுப்பினர்கள், மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் | Clean Sri Lanka Project In Kinniya

இதன்போது, தன்னார்வ தொண்டர்கள் கடற்கரையிலிருந்து பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் பிற கழிவுப்பொருட்களை அகற்றி, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், சுத்தமான, பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும் பங்களிப்பினைச் செய்தனர்.

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

உணவுக்காக நகைகளை அடகு வைக்கும் மக்கள்: ஆய்வில் வெளியான தகவல்

காற்றின் தரம் 

மேலும், இந்த பகுதியில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், காற்றின் தரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடவும் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் | Clean Sri Lanka Project In Kinniya

அத்துடன், இந்த செயற்றிட்டத்தில் குறித்த தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிறப்பு விகிதம் வீழ்ச்சி: வெளியான எச்சரிக்கை

இலங்கையின் பிறப்பு விகிதம் வீழ்ச்சி: வெளியான எச்சரிக்கை

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery