மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Central Bank of Sri Lanka Ajith Nivard Cabraal
By Mubarak Oct 10, 2024 09:21 AM GMT
Mubarak

Mubarak

மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (10) குறித்த குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு, கிரீஸ் (Greece) கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

புதிய பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமனம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு

இதனைத் தொடர்ந்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன.

மத்திய வங்கி மோசடி : அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Charge Sheet Filed Against Ajith Nivard Cabral

பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுமாறும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பில் தனித்து போட்டியிட தீர்மானம்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில் எந்த கட்சியும் இல்லை: லால்காந்த

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில் எந்த கட்சியும் இல்லை: லால்காந்த

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW