தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில் எந்த கட்சியும் இல்லை: லால்காந்த
தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை என அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு ,நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாவலப்பிட்டியில் நேற்றையதினம் (9) இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி வெற்றி
அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டியுடன் சுற்றித் திரண்டு வருகின்றனர்.
பொதுத் தேர்தல
நாவலப்பிட்டி தொகுதி மஹிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருகின்றனர்.பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |