முஸ்லிம் சமூகத்திற்கான அமைச்சுப் பதவி : பிரதியமைச்சர் முனீர் முழப்பரின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Politician Sri Lanka Sri Lanka Cabinet Government Of Sri Lanka National People's Power - NPP
By Rakshana MA Dec 01, 2024 10:37 AM GMT
Rakshana MA

Rakshana MA

முஸ்லிம், தமிழர் என்ற வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு சேவை செய்யும் துறைசார்ந்த சிறந்தவரே நாட்டுக்கு தேவை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முழப்பர்(Muneer Mulaffar) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியானது முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்படாதது குறித்து முஸ்லிம் சமூகம் வருந்த தேவையில்லை. அமைச்சுப்பதவிகளில் மாற்றம் ஏற்படலாம்.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அமைச்சுப்பதவி

அரசின் 5வருட காலப்பகுதியில் முஸ்லிம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகள் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பது முஸ்லிம் சமூகத்தின் விருப்பாக இருந்திருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்திற்கான அமைச்சுப் பதவி : பிரதியமைச்சர் முனீர் முழப்பரின் முக்கிய அறிவிப்பு | Change Needed In Public Views On Parliament Muneer

சுதந்திரத்தின் பின்னரான முதலாவது அமைச்சரவையில் இருந்து முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்கின்றார்.

அதுவொரு சமூக மனநிலை. அரசு ஒரு கூட்டணி அரசாக அமைகின்ற போது அதில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் கட்சிகள் தமக்கான அமைச்சுப்பதவிகளை கோரியே ஆதரவு வழங்குவார்கள்.

அவர்களுக்கு தாம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுவதுண்டு.

கிழக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கிழக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தகுதியானவர்களுக்கு மாத்திரம் அமைச்சுப்பதவிகள்

தேசிய மக்கள் சக்தி இவ்விடத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக கொண்டிருக்கின்றது. துறைசார்ந்த திறமையானவர்கள் எந்த மதத்தவராயினும், இனத்தவராயினும் தேசிய மக்கள் சக்தி அதன் அமைச்சரவையில் அவர்களை உள்ளீர்க்கும்.

அவ்வாறாயின், முஸ்லிம் சமூகத்தில் பொறுத்தமானவர்கள் இல்லையா? என்ற கேள்வி எழலாம்..

முஸ்லிம் சமூகத்திற்கான அமைச்சுப் பதவி : பிரதியமைச்சர் முனீர் முழப்பரின் முக்கிய அறிவிப்பு | Change Needed In Public Views On Parliament Muneer

ஆனால் அதில் முஸ்லிம் தமிழ் என்ற வேறுபாடு பார்க்காமல் மக்களுக்கு பணியாற்ற துறைசார்ந்த சிறந்தவர் என்பதே பொறுத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

அதுமாத்திரமல்ல, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு என்பதும் 5 வருடங்களுக்கும் ஒரே மாதிரியாகவும் இருக்காது. இடையில் மாற்றங்கள் வரலாம்.

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!

பொருத்தமான ஆட்சியாளர்

அதில் ஒருவர் முஸ்லிம் அமைச்சராக நியமிக்கப்படலாம். எனவே, முஸ்லிம் சமூகம் பொறுமை காக்க வேண்டும்.

அரசு முழு இலங்கைக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்படுகையில், அதற்கு இனம் மதம் பாராது ஆதரவு வழங்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திற்கான அமைச்சுப் பதவி : பிரதியமைச்சர் முனீர் முழப்பரின் முக்கிய அறிவிப்பு | Change Needed In Public Views On Parliament Muneer

மாறாக அரசு இனரீதியாக, மொழி ரீதியாக அடக்க முற்பட்டால் அதனை எதிர்ப்பதில் தவறில்லை.

பொருத்தமானவர்களால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டின் பிரஜையாக இருப்பதை நான் விரும்புகின்றேன் என முனீர் முழப்பர் தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாட்டுக்கு கிடைத்த தீர்வு : அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அரிசி தட்டுப்பாட்டுக்கு கிடைத்த தீர்வு : அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW