சம்மாந்துறையில் உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்
சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுகாதாரமற்ற உணவு விநியோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலின் கீழ் நேற்று(25) இரவு சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் நோன்பு காலத்தினை முன்னிட்டு இது மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்குத் தாக்கல்
மேலும், இது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், அங்கிருந்து பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சோதனையில் இனங்காணப்பட்ட 5 உணவக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














