சுற்றுலாத்துறையின் வளர்ச்சி : வெளியான மத்திய வங்கியின் தரவு

Sri Lanka Sri Lankan Peoples Tourism CBSL
By Rakshana MA Jan 11, 2025 12:11 PM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த 2024 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை அண்ணளவாக 3.17 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு சுற்றுலா வருவாயுடன் ஒப்பிடும்போது இது 53.2 சதவீதம் அதிகமாக காணப்படுவதுடன், இது சுமார் 2.07 பில்லியன் டொலர்கள் என்றும் தரவு காட்டுகின்றது.

இலங்கையில் ஹிந்தி மொழியில் கல்வி : மேம்படுத்தும் திட்டம்

இலங்கையில் ஹிந்தி மொழியில் கல்வி : மேம்படுத்தும் திட்டம்

CBSL தரவு 

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக CBSL தரவு காட்டுகின்றது.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி : வெளியான மத்திய வங்கியின் தரவு | By 2024 Sri Lanka Tourism Income More Than 53 Perc

இந்த நிலையில், இதனை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 38.1 சதவீதம் அதிகமாக காணப்படுகின்றது.

ஆகவே, இலங்கை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம் 5 பில்லியன் டொலர் சுற்றுலா வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுலா அதிகாரிகள் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

90 வகையான மருந்துகளின் விலை குறைப்பு : முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

90 வகையான மருந்துகளின் விலை குறைப்பு : முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

சொகுசுப் பேருந்துகள் மீண்டும் விமான நிலையம் செல்ல அனுமதி

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW