அநுரவின் முதலாவது பட்ஜெட்டுக்கு எதிர்த்தரப்பில் இருந்து ஆதரவு கரம்
அநுர அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்றையதினம் சபையில் பெரும்பான்மை ஆதரவு வாக்குகளோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சபையில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து கடந்த ஒரு மாத காலமாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாத விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் 159 என்ற பெரும்பான்மை ஆதரவு வாக்குகளோடு வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத்திட்டம்
மேலும், இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த காதர் மஸ்தான் எம்.பி வாக்களித்திருந்தமை சமகால அரசியல் பரப்பில் வியப்பாக பார்க்கப்பட்டது.
வழமையாகவே ஏனைய அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி எம்.பிக்கள் வாக்களிக்கின்றமை நடைபெறுகின்ற ஒன்றுதான் என்ற போதிலும், அநுர தரப்பின் முதலாவது வரவு செலவுத் திட்டத்திற்கு, அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சிகளில் கடுமையாக, அதிகமாக விமர்சிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சியில் இருந்து கிடைத்த ஆதரவு வாக்கு என்பது வியப்பாகவே பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
