மட்டக்களப்பில் வனவளத்திணைக்கள அதிகாரிகளின் அடாவடித்தனம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவோரின் குடிசைகளை வனவன திணைக்கள அதிகாரிகள் எரித்து அடாவடித்தனங்களை முன்னெடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாங்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை, வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளிலேயே வனவளத்திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் இந்த அடாவடித்தனத்தினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் உள்ள சுமார் 13 கொட்டில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்ச்செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த கச்சான், சோளன் விதைகளையும் வனவள திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(25) பிற்பகல் அப்பகுதிக்குள் நுழைந்த வனவளத்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் மக்கள் வெளியே சென்ற நிலையில் குறித்த பகுதியில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









