மட்டக்களப்பில் மார்பக புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுப் பேரணி
மட்டக்களப்பு - வாழைச்சேனையில்“புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது.
குறித்த பேரணியானது வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (18) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களமும் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
விழிப்புணர்வு பேரணி
இந்த விழிப்புணர்வு பேரணியானது வாழைச்சேனை இந்து கல்லூரி முன்பாக ஆரம்பமாகி, கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயிலிருந்து அவர்களை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
மார்பக புற்றுநோய்
நடைபயண நிறைவில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸார் மற்றும் தனியார் நிறுவனம் மற்றும் பெண்கள் அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |