நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,383 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,284 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோயாளர்கள் அடையாளம்
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சமூக சுகாதார வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |