பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Money
By Rakshana MA Jan 16, 2025 07:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், நுகர்வோருக்கு பாண் ஒன்றினை 100 ரூபாவில் வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்க பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கையில், 

பாண் விலை அதிகரிப்பினால் பாண் பாவனை ஓரளவு குறைந்துள்ளது.

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி

கோதுமை மா 

இதனை தொடர்ந்து டொலரின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு கிலோ கோதுமை மாவை 190 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் காணப்படுகின்றது.

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Bread Price In Sri Lanka 2025

இதேவேளை கோதுமை ஒரு கிலோவுக்கு 45 ரூபா வரி குறைக்கப்பட்டு, கோதுமை மாவை இறக்குமதி செய்ய எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கினால், நிறுவனங்களின் ஏகபோக உரிமை உடைக்கப்படும் எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

நிவாரணம்

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் பதிலளிக்கையில்,

பேக்கரி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அதற்காக கோதுமை மா மற்றும் வெண்ணெய் இறக்குமதியாளர்களை அழைத்து உடனடியாக கலந்துரையாடல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

பாண் விலை குறைப்பு! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Bread Price In Sri Lanka 2025

மேலும் இந்த கலந்துரையாடலில், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

சட்டவிரோத பொருட்களை விற்க முயன்ற பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கைது

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

கிழக்கு - வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் விபத்து

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW