125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் மாபெரும் இரத்ததான முகாம்

Sri Lankan Peoples Kalmunai Sri Lankan Schools School Incident
By Rakshana MA Jan 25, 2025 04:29 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை(Kalmunai) கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று(25) மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரத்ததான முகாமானது கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்டின் தலைமையில், கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம்  காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

மகிந்த தரப்பின் கோடிக்கணக்கான டொலர்கள்! அநுரவின் நடவடிக்கை என்ன

125ஆவது ஆண்டு நிறைவு விழா

மேலும் கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினரின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பல நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் மாபெரும் இரத்ததான முகாம் | Blood Donation At Kalmunai Carmel Fattima School

அத்துடன் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் பி.எம்.கவிதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டம்

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery