திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Rakshana MA Jan 21, 2025 05:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்தியாவுடனான கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura KUmara Dissanayake) பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பிரவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயத்தினை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கட்டுகுருந்த கூட்டத்தில், ஜனாதிபதி வெளியிட்ட தகவல் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்றைய கட்டுக்குருந்த கூட்டத்தின்போது, 99 தாங்கிகளில் 61 தாங்கிகள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்படும் என்றும், 24 தாங்கிகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இருக்கும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

சீரற்ற காலநிலை : அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீரற்ற காலநிலை : அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திட்டத்தை முன்வைத்த கம்மன்பில

எனினும் இதற்கு பதிலளித்துள்ள கம்மன்பில, ஜனாதிபதி இதை ஒரு புதிய முயற்சியாக முன்வைத்ததாகவும், ஆனால் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் இறுதி செய்யப்பட்டது.

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு | Blame President Misleading Trinco Fuel Carriers

தாம், 2020 இல் கடமைகளை ஏற்றுக்கொண்டபோது, 99 தாங்கிகளும் 2002 முதல் இந்திய கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றில், 14 மட்டுமே லங்கா ஐ.ஓ.சியின் பயன்பாட்டில் இருந்தன. மேலும், இரண்டு தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தன. மீதமுள்ள 83 தாங்கிகள் 75 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்தன.

எனினும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அதில் 83 தாங்கிகளையும் மீட்டெடுக்க முடிந்தது. 24ஐ இலங்கை பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செயல்பாடுகளுக்காக வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனத்தின் கீழ் கூட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம் 2022 ஜனவரி 6ஆம் திகதியன்று கையெழுத்தானது என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். எனினும் ஜனாதிபதி இதனை புதிய முயற்சியாக குறிப்பிட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

47ஆவது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்

47ஆவது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கவுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW