மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை

Batticaloa Mullaitivu Eastern Province ITAK
By Rakshana MA Aug 16, 2025 03:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

தமிழர் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கடையடைப்புக்கு மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்தகர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டு.மாநகரசபையில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் மாநகரசபை முதல்வர் இந்த கடையடைப்புக்கு ஆதரவு கோரியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுத்துள்ள வடக்கு கிழக்கில் கடையடைப்பு போராட்டம் எதிர்வரும் 18 ம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

முதல்வரின் கோரிக்கை

எனவே அன்றைய தினம் மாநகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்குமாறு பணிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை | Batticaloa Hartal Against Army Camps

வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அடாவடித்தனம் காரணமாக மக்களின் நாளாந்த வாழ்வியல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அண்மையில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு அவர் உயிர்பறிக்கப்பட்டு அந்த குடும்பம் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே தமிழர் தாயகத்தில் காரணம் இன்றி இருக்கின்ற இராணுவ முகாம்ங்கள் அகற்றப்படவேண்டும் என பல்வேறுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அகற்றப்படாமல் உள்ளது.

தமிழ் மக்களுக்கான நீதிவேண்டி இந்த இராணுவ முகாம்ங்களை அகற்றி கோரி கடையடைப்பு இடம்பெறவுள்ளது.

ஆகவே மாநகரத்திலுள்ள கடை வியாபாரிகள் அன்றைய தினம் தங்களது கடைகளை மூடி இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு மாநகர முதல்வர் என்ற வகையில் கோரி நிற்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

கிண்ணியாவில் பாடசாலை ஊழியர்களுக்கான நடமாடும் சேவை!

கிண்ணியாவில் பாடசாலை ஊழியர்களுக்கான நடமாடும் சேவை!

எந்தவொரு செயற்கை கோளும் இலங்கையின் பெயரில் இல்லை!

எந்தவொரு செயற்கை கோளும் இலங்கையின் பெயரில் இல்லை!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW