கிண்ணியாவில் பாடசாலை ஊழியர்களுக்கான நடமாடும் சேவை!
கிண்ணியா (Kinniya) வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில், பணியாற்றும் கல்விசார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் சுய விபரக் கோவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையானது, இன்று (15) கிண்ணியா ரீ.பி.ஜாயா மகளிர் மகா வித்தியாலயத்தில், வலய கல்வி பணிப்பாளர் முனவ்வரா நளீம் தலைமையின் கீழ், முதலாவது நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நடமாடும் சேவை
இந்த சேவையினை, வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக பாடசாலைகளுக்கு சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, பயனாளிகளின் முதல் நியமன கடிதம், முதல் நியமன கடிதத்தின் பதவியேற்றல் கடிதம், திருமணச் சான்றிதழ், மனைவி/கணவர் மற்றும் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், நியமனத்தின் பின்னரான இடமாற்ற கடிதங்கள் மற்றும் பதவியேற்றல் கடிதங்கள், பதவி உயர்வுகள் சம்பந்தமான கடிதங்கள் பதவி ஏற்ற கடிதங்கள், கல்வி அமைச்சு அல்லது மாகாண திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள ஏனைய கடிதங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்து, சுய விபரக் கோவையில் உள்ள குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என வலைய கல்வி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






