மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்
மட்டக்களப்பு சவுக்கடி பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (11) பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில் ஒன்றில் வேலை செய்து வரும் லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டார்.
மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடற்கரையை அண்மித்ததாக உள்ள சவுக்கு தோட்டப் பகுதியில் இளைஞனின் சடலம் பிரதேச மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்பு
உயிரிழந்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சடலமாக அடையாளம் காணப்பட்ட இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




