கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டம்!
Ilankai Tamil Arasu Kachchi
Sri Lanka
Sri Lankan Peoples
Eastern Province
Northern Province of Sri Lanka
By Rakshana MA
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15ஆம் திகதி - வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
போராட்டத்திற்கான அழைப்பு
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டில் இளம் குடும்பஸ்தர் இராணுவத்தினரின் தாக்குதலில் உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், இந்தப் போராட்டத் துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் இதன் போது கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |