திருகோணமலையில் வியாபாரிகளுக்கு தராசு வழங்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 197 கடற்றொழிலாளர்களுக்கு தராசு வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று(26) இந்த தராசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
பயனடைந்த கடற்றொழிலாளர்கள்
கந்தளாய், மூதூர், குச்சவெளி, கிண்ணியா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, கடற்றொழிலாளர்கள் தராசுகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் பேணுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கை இது எனவும், அடுத்த கட்டமாக, கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த தராசு வழங்கும் நிகழ்வில், கிண்ணியா நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |