திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

Sri Lanka Tourism Tourism Climate Change Weather School Children
By Laksi Mar 01, 2025 08:25 AM GMT
Laksi

Laksi

தற்போதைய மழை நிலைமைகள் காரணமாக யால தேசிய பூங்காவை (Yala National Park) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று ( 1) முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

சுற்றுலாப் பயணிகள் சிரமம்

அதன்படி, யால வலய இலக்கம் 01 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா | Bad Weather Yala National Park Closed

மேலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முன்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக யால சஃபாரி ஜீப் வாகன சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

எரிபொருள் நெருக்கடி: பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW