மட்டக்களப்பில் உலக வாலிபர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

Batticaloa Sri Lanka Eastern Province
By Laksi Aug 31, 2024 02:52 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு- சித்தாண்டியில் இளைஞர்களுக்கு டிஜிட்டல் பாதைகள் பற்றிய விழிப்புணர்வு நடை பவணியும் வீதி நாடகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வானது உலக வாலிபர் தினத்தையொட்டி , அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முறக்கொட்டாஞ்சேனை பரிபவுல் ஆலயத்தின் ஏற்பாட்டில் இன்று (31) நடைபெற்றுள்ளது.

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

விழிப்புணர்வு நாடகம் 

இதன்போது, இளைஞர்களே டிஜிட்டல் பாதைகள் தொடர்பில் அறிந்திருங்கள் எனும் தொனிப்பொருளில், முறக்கொட்டாஞ்சேனை - அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலையம் முன் ஆரம்பமான பேரணி சித்தாண்டி பிரதான வீதி வழியாக சென்று பொதுச் சந்தையை அடைந்து அங்கிருந்து மீண்டும் சித்தாண்டி சந்தியை வந்தடைந்தது.

மட்டக்களப்பில் உலக வாலிபர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி | Awareness Walk Held In Batticaloa

இந்த பேரணியைத் தொடர்ந்து விழிப்புணர்வு நாடகமும் ஆலய வாலிபர்களால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அரோமா சிறுவர் அபிவிருத்தி நிலைய முறக்கொட்டாஞ்சேனை பரி.பவுல் ஆலயத்தின் இயக்குநர் அருட்பணி நேசராஜா சபிலாஷ் , அதன் முகாமையாளர் பிரதீபா மரியஸ் டெனிஸ்லஸ், இளைஞர் பிரதேச மன்ற பிரதேச சம்மேளன தலைவர்  தேவாலய வாலிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW