மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

Human Rights Commission Of Sri Lanka Human Rights Council Ampara Batticaloa Eastern Province
By Laksi Dec 13, 2024 05:03 AM GMT
Laksi

Laksi

சர்வதேச மனித உரிமைகள் தினம் நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பில் (Batticaloa) மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த செயலமர்வானது மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று (12)  வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் எம்.ரகுநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஹிசைடீன், சமூக செயற்பாட்டாளர் கலாநிதி செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

சான்றிதழ்கள் 

காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 12.30 வரை இடம் பெற்ற செயலமர்வில் பயனாளிகளாக இளைஞர், யுவதிகள் என பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு | Awareness Session Human Rights Education In Batti

இந்தநிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் கதிர் பாரதிதாசன், தொழிலதிபர் மோ.சுதாகரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

புத்தளத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

புத்தளத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery