போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்

Pakistan India Indian Army
By Rakshana MA May 11, 2025 03:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

"எங்கள் தரப்பில் இருந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது கேள்விக்குறியே" என்று பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் பாகிஸ்தான் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவுக்கு எதிரான வெற்றியை பாகிஸ்தான் மக்கள் கொண்டாடினர்" என்று தரார் கூறியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

தாக்குதல்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல் | Attack In Kashmir After Ceasefire Agreement

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரம் முழுவதும் பலத்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டது.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்தியா குற்றம் சுமத்தியது.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.  

கிண்ணியாவில் கடின பந்து ஆடுகளத்தை காணவில்லை!

கிண்ணியாவில் கடின பந்து ஆடுகளத்தை காணவில்லை!

சாய்ந்தமருதுவில் புதிய முஸ்லிம் விவாக பதிவாளர் நியமனம்

சாய்ந்தமருதுவில் புதிய முஸ்லிம் விவாக பதிவாளர் நியமனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW