சாய்ந்தமருதுவில் புதிய முஸ்லிம் விவாக பதிவாளர் நியமனம்
Sri Lankan Peoples
Marriage
Eastern Province
Sammanthurai
By Rakshana MA
சாய்ந்தமருது - காரைதீவு(Karaitivu) பிரதேச செயலக நிர்வாகத்தின் முஸ்லிம் விவாகப் பதிவாளராக முஹம்மட் ரஹுபி பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் மாவட்ட பதிவாளர் துமிந்த புஸ்பகுமாரவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று(09) முதல் காரைதீலு பிரதேச செயலகத்தில் குறித்த பணிக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
முஸ்லிம் விவாக பதிவாளர்
மேலும், இவர் கடந்த காலங்களில் மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்னாள் செயலாளராகவும், ஜனாஸா நலன்புரி அமைப்பின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றுள்ள நிலையில் இந்நியமனம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
